என் சிறுவயது முதல் மரங்களின் 🌴 மேல் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு விடை காணும் நோக்கத்தோடு 5 ஏக்கர் நிலத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மகாலட்சுமி பண்ணை.
இங்கு 🌱கொய்யா, சப்போட்டா, நாவல்பழம், சீத்தாப்பழம், பப்ளிமாஸ், அவகாடோ, அத்திப்பழம், எலந்தப்பழம் போன்ற பழ மரங்களும், பாதாம், இலுப்பை, மகிழம், குல்மோகர், அரசமரம், ஆலமரம், வேப்பமரம், புளியமரம், கல்யாண முருங்கை, நெல்லிக்காய், கொடிக்காய், தென்னை, மகோகனி, ரோஸ்வுட், மருது, செம்மரம், புன்னை, மலைவேம்பு, பன்னீர், ராயல் பார்ம் என மொத்தம் எண்ணிக்கையில் 400 க்கும் அதிகமான மரங்கள்🌴 உள்ளன.
இத்தகைய இயற்கையான சூழல் இங்கு வருபவர்களின் மனதை கவரும் என நம்புகிறேன்.
– செந்தில் குமார் B.E., உரிமையாளர்
Mahalakshmi Goat Farm | Kovilpatti | Erachi