ABOUT FARM & SOCIAL INITIATIVES
மரங்கள் அடர்ந்த பசுமையான சூழலில் 5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது மகாலட்சுமி பண்ணை. ஐந்து ஏக்கர் நிலமும் காம்பவுண்ட் சுவரால் சூழப்பட்டுள்ளது.
ஆட்டிறைச்சிக்கு எப்பொழுதும் இருக்கும் தேவையை கருத்தில் கொண்டு, மக்களுக்கு தரமான ஆடுகளை கொடுக்கும் எண்ணத்தில் 2019ஆம் ஆண்டு முழு நேர ஆட்டுப்பண்ணையாக, மகாலட்சுமி ஆட்டுப்பண்ணை என பெயர் மாற்றப்பட்டது.
பண்ணையின் நடுவில் ஒரு ஏக்கர் நிலம் கம்பி வேலி ஃபென்சிங்கால் பிரிக்கப்பட்டு, அதனுள் இரண்டு பெரிய ஆட்டு கொட்டகைகள் போடப்பட்டுள்ளன. ஆடுகள் எப்பொழுதும் கொட்டகையில் அடைந்து கிடக்காமல் தன்னிச்சையாக வெளியே சுற்றித்திரியும் வகையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக சுற்றித்திரிந்து வளரும் ஆடுகளின் இறைச்சி சுவையானதாகவும் தரமானதாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இது தவிர ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டிற்குத் தேவையான பசுந்தீவனங்கள் அகத்தி, சீமை புல், சூப்பர் நேப்பியர் புல், குதிரைமசால் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அடர்தீவனமாக பருத்திக்கொட்டை, சீனவரைப் பொட்டு, மக்காச்சோளம் கொடுக்கப்படுகிறது. மேலும் தண்ணீருடன் சேர்த்து குச்சிப் புண்ணாக்கு மற்றும் கோதுமை தவிடு கொடுக்கப்படுகிறது.
இவ்வாறாக இயற்கை மற்றும் சுகாதாரமான முறையில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் இங்கு நாட்டு கோழிகள், ஜாதி கோழிகள், வான் கோழிகள், கின்னி கோழிகள், மாடுகள் மற்றும் நாட்டு வாத்துகளும் வளர்க்கப்படுகின்றன.
SOCIAL INITIATIVES:
இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் விவசாயம், மரங்கள் வளர்ப்பு, ஆடு, மாடு, கோழி மற்றும் வாத்து வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக களப்பயணத்திற்கும் (FIELD TRIP) அனுமதி அளிக்கிறோம்.
மேலும் அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் (SPOKEN ENGLISH) வகுப்புகளும் பண்ணையில் இலவசமாக நடத்தப்படுகின்றன.
– செந்தில் குமார் B.E., உரிமையாளர்.
We Home Deliver Goats as Per Your Need.
CONTACT US
Mahalakshmi Goat Farm
5/60,
Keelath Theru,
Irachi,
Tamil Nadu – 628720,
India.
Mobile – +91 8838253302
Monday – Sunday (06.00 AM – 10.00 PM)
Mail – mahalakshmifarm1@gmail.com